அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்..
(எடுத்தெரியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
(அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால் (துவங்குகிறேன்)
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)
இறைவனிடம் கையேந்துங்கள்:
ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்
இறைவனிடம் கையேந்தி கேட்க்கப்படும் எந்தப் ஒரு பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்பதினை இந்த நபிமொழி கூறுகிறது.
"தேவைகள்" என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கிய அம்சமாகும். தேவைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது
நமது தேவைகளை, இறைவனிடம் மட்டுமே தான் கூற முடியும். இறைவனிடம் அந்த ஹலாலான தேவைகளை சொல்லும் போது நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி கூட சில தேவைகள் நிறைவேறாவிட்டால் கூட இறைவனிடத்தில் தேவைகளை ஒப்படைத்து விட்டோம். அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது.
நாம் தினம் தினம் இறைவனை நினைத்து தொழுது இறைவனை வணங்கி அவனிடமே இருகரம் ஏந்தி பிராத்திக்க வேண்டும்..
சிலர் தினமும் 5 வேலை கடமைக்காக தொழுது... இறைவனிடம் தேவைகளை மட்டுமே குறி வைத்து கேட்டு தொழுதால் அந்த தேடல்கள் நிறைவேறுவது கஷ்டமே..
கஷ்டம் வரும் பொழுது மட்டுமே சிலர் இறைவனை நாடுகிறார்கள்.. அழுது தொழுது அந்த வேலையில் மட்டுமே இறை ஞானம் வரும் சிலரையும் பார்க்க முடிகிறது.. இது அவர்கள் அறியாமல் செய்யும் தவறு..(அல்லாஹ் காப்பாற்றுவானாக) அல்லாஹ் நன்கு அறிந்தவன்..
அப்படி எல்லாம் தேவைகளுக்கு மட்டுமே இறைவனை நாடாமல் இறை நேசத்துடனும் அவனுக்கு நன்றி செலுத்தியும் இறைவனிடம் மன்றாடி கேளுங்கள்... உங்களின் தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான்...
அவனிடம் மட்டுமே கோரிக்கை வையுங்கள்... மனதினை ஓர்நிலைப் படுத்தி இறையச்சத்துடன் பயபக்தியுடனும் தொழுது நமது தேவைகளை கேட்டால் நிச்சயம் அந்த தேவைகள் நிறைவேறும்.. (அல்லாஹ் துணையிருப்பான்)
எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாகவும் ஆமீன்..
இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் வேறு சில இறை செய்திகளுடன் சந்திக்கிறேன் வஸலாம்
..............................................................................
இந்த பக்கத்தினை நான் உருவாக்க காரணங்கள் உண்டு...
மார்க்க அறிவினை நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதர்க்கும்
எனது மகளுக்கு மார்க்க விஷயங்களை சொல்லி கொடுக்க இது ஒரு பாலமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையிலும், எனது நேரத்தினையும் படிக்கும் உங்களின் நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பம் செய்திருக்கேன்.. உங்களின் தூவாக்களுடன்...
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வாரம் ஓர் பதிவு போடலாம் என்று இருக்கேன் (இன்ஷா அல்லாஹ்)
|