Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, July 19, 2012

ரமலான் சிறப்புகள்:


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புனித மிக்க இந்த அருமையான ரமலான் மாதம் நோன்புக்குரிய மாதம்.  சிறப்பான மாதத்தினை நாம் அடைந்துவிட்டோம்..
இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா?

Free Orkut and MySpace ramadan mubarak Graphics Glitters
 நபிகள் நாயகம்(ஸல்) கூறுகிறார்கள்
”ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர  வேறு யாரும் நுழைய மாட்டார்கள்."

Free Orkut and MySpace ramadan mubarak Graphics Glitters
யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் “லைலத்துல் கத்ர்’ இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
“யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’
என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்ய  நபி (ஸல்) அவர்களும் ‘ஆமீன்’ என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதம் எவ்வளவ்வு மதிப்புகுரிய மாதம் என்று நாம் உணர வேண்டும் .
இந்த மாததில் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அதிகம் இறைவனை நினைத்து நாம் செய்யத அறிந்தும் அறியாமல் செய்த பாவகளுக்கு பிழைப்பொறுக்க து ஆ செய்யவும்.
”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,” என்கிறான் அல்லாஹ்.
Ramadan Mubarak
 லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி)
எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம். அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாகவும் ஆமீன்.



Friday, June 29, 2012

ஜும்மா நாளின் சிறப்பு


  • வெள்ளி ஜூம்மாவுக்கு விரைவாக பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி நாம் அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு பள்ளிக்கு விரைவாக செல்வதை பழக்கமாக்கிக் கொள்வோம்..
  • குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
”பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.
ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்



  • இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)

  • ”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள்.

  • இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
  • இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும்.

  • நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ”உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்”. (நூல்: புகாரி.)
  • நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்க, அவர் ”இல்லை” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக” என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)
  • வெள்ளிக்கிழமை இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தொழுதுவிட்டுத்தான் உட்காரவேண்டும்



ஜூம்மாவுக்கு நேரம் தாமதமானால்:
  • ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930)



Friday, January 20, 2012

அமானிதம் பேணல்


இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். - 2:283
.



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று குழந்தைக்கான மார்க்க கதையில் அமானிதம் பேணல் பற்றி சொல்லப் போகிறேன்.
  • உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்ற புகழ் பெற்ற கலீஃபா ஒருவர் இருந்தார். அவர் அரசாங்கக் கருவூலத்தைப் பொதுமக்களின் அமானிதமாகக் கருதினார். அதனை பேணிப் பாதுகாத்து வந்தார்.
  • ஒரு நாள் அரசாங்கக் கருவூலத்துக்கு ஆப்பிள் பழங்கள் வந்தன. அவர் அவற்றைச் சட்டப்படி மக்களுக்குப் பங்கிட்டுத் தந்து கொண்டிருந்தார்.
  • அப்பக்கமாக அவரின் சிறிய பிள்ளைகள் வந்தன. ஏதுவும் அறியா சிறு பிள்ளைகள்ளாக இருந்தார்கள். இந்த ஆப்பிள் பழம் யாருடையதென அவர்களுக்கு எப்படி தெரியும்.?
  • தம் வாப்பா தானே அனைவருக்கும் கொடுத்துக்கொண்டுயிருரார்கள் நம்முடையது தான் என்று நினைத்து ஒரு ஆப்பிளை எடுத்து தின்ன முயன்றது.
  • ஆப்பிள் பழம் அரசங்கத்துடையது. அரசாங்க பொருட்களோ குடிமக்களுக்குரியது! என்று தம் பிள்ளைகள் ஆப்பிள் பழம் எடுத்து உண்ண எப்படி அனுமதிப்பார்? அப்படியே அனுமதித்தால் மக்கள் பொருள் பொருள் மீது நம்பிக்கை மோசதி செய்வதாகிவிடுமே!
  • இதனால் கலீஃபா தம் பிள்ளைகளிடமிருந்து ஆப்பிளை வாங்கிக் கொண்டார். பிள்ளைகள் அழ ஆரம்பித்துவிட்டது. கலீஃபாவும் தன் அருகில் அழைத்தார், ஆயினும் பிள்ளைகள் அழுதுக்கொண்டே தன் வீட்டிர்க்குச் சென்று நடந்ததனை தாயிடம் சொன்னது.



தாய் , மகனின் கண்ணீரை துடைத்துவிட்டு, அருகில் இருக்கும் கடையில் ஆப்பிள் வாங்கி கொடுத்து சமாதானம் செய்தார்கள்.
கலீஃபா வீட்டினுள் நுழைந்த பொழுது ஆப்பிள் வாடை வீசியது, " அரசாங்க ஆப்பிள் எதுவும் வீட்டினுள் வரவில்லையே?" என்று தன் மனைவியிடம் கேட்டார்.
"அரசாங்க ஆப்பிள் ஒன்றுமில்லை, நான் கடையில் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்கள்..
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.8:27.

பிள்ளைகளிடம் நீங்கள் ஆப்பிள் வாங்கியதால் குழந்தைகள் அழுதுக்கொண்டே வந்தன. எவ்வளவும் சொல்லியும் அவர்கள் திருப்தியடையவில்லை. ஆகையால் நான் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்கள்.

பீவி! நான் என்ன செய்வேன்! ஆப்பிள் அரசாங்கத்துக்குரியது. ஒரு ஆப்பிள் நான் எடுத்தாலும் அல்லாஹ்வினிடத்தில் ஈமான் அற்றவனாய்யாகிவிடுவேனே.. என்று தான் நான் பிள்ளைகளிடமிருந்து ஆப்பிளை வாங்கினேன் என்றார்கள்.
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும்,
மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58


பிள்ளைகளை இந்த கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது.. நம்மிடத்தில் ஒருவர் பாதுகாப்பாக கொடுத்த எந்த ஒரு பொருளையும் நாம் பயன்படுத்தக் கூடாது.. அப்படி நாம் அவர்களின் பொருட்களை நாம் எடுத்தால் நிச்சயமாக மறுமையில் அல்லாஹ்விடம் ஈமான் அற்ரவர்களாகிவிடுவோம்.. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.



Friday, January 6, 2012

அண்டை வீட்டாரிடம் அன்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்னைக்கு நமது வலைப்பூவில் குழந்தைகளுக்கான மார்க்க கதை சொல்லபோறேன்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அப்துல்லாஹ் (ரலி) என்ற ஒரு ஸஹாபி இருந்தார். அவர் மிகவும் நல்லவராகவும், அல்லாஹ், ரஸூலின் கட்டளைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்.
அவருக்கு அண்டை வீட்டில் ஒரு யூதர் இருந்தார்.
ஒரு நாள் அப்துல்லாஹ் (ரலி) வெளியே போயிருந்தார். மாலையில் தான் வீட்டுக்குத் திரும்பினார். அவர் வீட்டில் உணவாக ஒரு கடா அறுக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து
"அண்டை வீட்டுக்காரருக்கு மாமிசம் கொடுத்தீர்களா?" எனக் கேட்டார்கள்.
"அவரோ யூதர், அவருக்கு ஏன் கொடுக்க வேண்டும்?"
என்று வீட்டார்கள் கேட்டார்கள்.
"யூதராக இருந்தால் என்ன? அவர் நமது அண்டை வீட்டார்தானே. என அப்துல்லாஹ் (ரலி) பதில் கூறினார்கள்.
"அண்டை வீட்டாருடன் அன்புடன் நடந்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் நம் இஸ்லாமியராக இருந்தாலும் சரி இஸ்லாமியர் அல்லாதவர்களாக இருந்தாலும் சரியே" என்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) வற்புறுத்திக் கூறியுள்ளதை அப்துல்லாக்(ரலி) தம் வீட்டாருக்கு எடுத்துணர்த்தினார்கள்..
அன்பு குழந்தைகளே.. இந்த கதையின் மூலம் உங்களுக்கு என்ன புரிந்தது..? நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் எந்தளவுக்கு அன்பாய் இருக்கிறோமோ இதனை போல் நாம் அண்டை வீட்டாரிடமும் அன்பாய்யிருக்க வேண்டும். குர்ஆனிலும் நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையிலும் அண்டை வீட்டாருடன் இனக்கமாக நடந்து கொள்வது வலியுறுத்தப்படுகிறது. அண்டைவீட்டாரிடம் அன்பாய் இருக்கனும் அவர்களுக்கு நம்மால் எந்த துன்பமும் கொடுக்ககூடாது..
நபி நாயகம் (ஸல்) "எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகின்றாரோ அவர் என்னை துன்புறுத்தியவராவார்.
அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன்."
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த மனிதரின் இடையூறுகளிலிருந்து, அவரது அடுத்த வீட்டுக்காரன் பயமற்று இருக்கவில்லையோ அந்த மனிதர் சுவனம் புகமாட்டார்” என
-அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம்)
அண்டை வீட்டாருக்கு நம்முடைய அன்பும், அரவணைப்பும், விருந்தும் இரு குடும்பத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
வஸலாம்