Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, May 22, 2011

அர்ஷின் கீழ் நிழல் தரும் அந்த 7 கூட்டத்தினர்:

அல்லாஹ்வின் நிழலைத் தவர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் 7 கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் இடம் கொடுப்பான்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஹ்ஷர் வெளியின் அகோரம்:
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும், அங்கு சூரியன் மனிதர்களுக்கு ஒரு மைல் தூரத்தில் நெருங்கியிருக்கும்.
மனிதர்கள் அவரவர் செய்த பாவத்திற்கிணங்க வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.


அந்த இடத்தில் 4 கேள்விக்கு விடை சொல்லாதவரை ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. அந்த கேள்வி 1. உலகில் தன் வாழ்நாளை எப்படி கழித்தார்?
2.தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார்?
3.தன் பணத்தை எங்கிருந்து சம்பாதித்தார்? இன்னும் எப்படி செலவு செய்தார்?
4.தன் உடம்பில் எதனை அர்பணித்தார் என்று 4 கேள்விகள் கேட்க்கப்படும் வரை அடியானின் இரு பாதங்களும் அவர் இருக்கும் இடம் விட்டு நகராது என்று நபி(ஸ்ல) அவர்கள் கூரினார்கள்
இப்படி இக்கட்டான சூழ்நிலையில், ஓவ்வொருவரும் தன்னை பற்றியே சிந்திக்கும் அந் நாளில் தான் அல்லாஹ் தனது அர்ஷியின் நிழலில் 7 கூட்டத்தினரை அமரவைப்பான்.

அவர்கள்
1. நீதியான அரசன்.
2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் உருவான வாலிபன்.
3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்
4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
5. நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபசாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன் என்று கூறி ஓதுங்கிக் கொண்டவர்
6. வலது கரம் கொடுக்கும் தர்மம் இடது கரம் தெரியாமல் மறைமுகமாக தர்மம் செய்பவர்கள்
7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவர்.
அன்பு நண்பர்களே மேலே சொன்ன 7 கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று இந்த நோன்பு வேலையில் முடிவு எடுங்கள்.
அல்லாஹ் நிச்சயம் துணை இருப்பான் ஆமீன்


No comments:

Post a Comment