Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, December 16, 2011

தொழுகையின் சிறப்புகள்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.



பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்)
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை


பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:

என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபி (ஸள்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி



தொழுகையின் சிறப்பு
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)நூல் : அஹ்மத்
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72
தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

அல்லாஹ் நம் அனைவரையும் பேணிக்கொள்வானாகவும் ஆமீன். அல்லாஹ்வின் அருள் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும். ஆமீன்



Friday, December 9, 2011

இறையுணர்வு


         அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும்,


இறையுணர்வு இஸ்லாமிய மக்களின் மிக உச்சக்கட்ட பண்பு இறைநம்பிக்கை என்று குர் ஆன் கூறுகிறது.


                         

* உங்களில் யார் மிகவும் இறையச்சமுடையவராக இருக்கின்றாரோ அவரே அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியமானவர . (49:13)


* இரக்க சிந்தை, அடக்கம், ஆசைகளையும் , உணர்வுகளையும் கட்டுப்படுத்துதல், வாய்மை, ஓழுக்கம், பொறுமை, நிலைகுலையாமை, நேர்மை, ஓப்பந்தத்தை நிறைவேற்றல் ஆகிய நற்குணங்களை பற்றி இறைஒ வேதமான திருக் குர் ஆர் மீண்டும் மீண்டும் பல இடங்களில் வலியுறுத்துகிறது.



 " நிலைகுலையாத பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான். (3:146)




                          


* அவர்கள் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் சொலவழிப்பார்கள் , சினத்தை அடக்கிக் கொள்வார்கள், மேலும் மக்களை மன்னிப்பார்கள், இத்தகைய உயர்பண்பினரை இறைவன் நேசிக்கிறான். ( 3:133-134)


*தொழுகையினை நிலைநிறுத்துங்கள், நல்லவற்றை ஏவுங்கள், தீமைகளை விலக்குங்கள், சிரமங்களை சாதித்துக்கொள்ளுங்கள். செயல்களில் இது சத்திய நிலைப்பாடாகும். மனிதர்களை விட்டு முகத்தை (பெருமை கொண்டு) திருப்பிக் கொள்ளாதிர்கள். பூமியில் பெருமையுடன் நடக்காதீர்கள், கர்வம், பெருமை கொள்வோரை இறைவன் நேசிபதில்லை. நடத்தையில் நடுநிலையை விரும்புங்கள். குரலையும் தாழ்த்திக் கொள்ளுங்கள் . (31:18-19)




Thursday, December 1, 2011

குர் ஆனைக் கற்போம்..! கற்பிப்போம்..!


குர் ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் உஸ்மான்(ரலி)நூல்:புஹாரி



விளக்கம்:


  • மனித குலத்தின் ஒளி விளக்காக வந்தது திருக்குர் ஆன் ஆகும். இதில் மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக, பரிசுத்தமாக , மறுமையில் வெற்றிபெற அனைத்து வழிகாட்டுதலும் உண்டு. எனவே இத்தனை சிறப்பிமிக்க இந்த குர் ஆனை தாம் கற்பது கடைமையாகும். அத்துடன் தாம் கற்றதை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவதும் கடமையாகும்..



குர் ஆனைக் கற்போம்..! கற்பிப்போம்..!



Monday, November 7, 2011

தியாகத் திருநாள்‌ நல்வாழ்த்துக்கள்..!


இஸ்லாமியர்களின் பெருநாட்கள் இரண்டு. ஒன்று ஈகைத் திருநாள், மற்றது தியாகத் திருநாள். தியாகத் திருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் யாவரும் இறை தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களின் புனித வாழ்வை கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள்.
ஆம், நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்த்து நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. நாமும் இப்றாஹீம் (அலை)அவர்களின் உன்னத தியாகத்தை சற்று நினைவு கூர்வோமா..
நபி ஆதம் அலைஹிவஸல்லம் முதல் முகம்மது நபி அவர்கள் வரைக்கும் மக்கள் நிலைமை சீர் குலைந்து சின்னாபின்னமாகும் போதெல்லாம் இறைவன் மக்கள் குலத்திலிருந்தே ஒரு நேர்மையாளரை தேர்ந்தெடுத்துத் தனது நேர்வழியையும், அதைப் புறக்கணிப் போர்க்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்யவதையும் நபி(தூதர்) மூலமாக அவ்வப்போது போதித்து வந்துள்ளான்.




இப்படி தோன்றிய நபிமார்கள் பலரும் ஏக காலத்தில் அல்லாது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் தோன்றினார்கள். இவர்களுள் சுமார் 4,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக மன்னன் நம்ரூது என்பவனது சமகாலத்தில் தோன்றிய நபி இப்றாஹீம் அவர்களுக்கு இறைவன் தனதரும் தூதுவத்தை அளித்தான்.
கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும் பயப்படாது ஏக இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்றாஹீம் அவர்கள் அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். இறைவனே எல்லாம், அவனுக்கு ஈடு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்த நபி இப்றாஹீம் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தபோதும் குழந்தை கிடையாது. இந்நிலையில்தான் இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் இருகரம் ஏந்தி தூஆ செய்தார்கள்.



ஒன்றுக்கு இரண்டு தாரம் இருந்தும் எனக்கு ஏன் பிள்ளைப் பாக்கியத்தைக் கொடுத்தருளவில்லை. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் ஓர் உற்ற தோழரையாவது எனக்களித்தருள்புரிவாயாக என உளமுருக பிரார்த்தனை செய்தார்கள்.
இப்றாஹீம் நபியுடைய இந்த இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான் அல்லாஹ். இப்றாஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு இறையருளால் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்கள். மட்டில்லா மகிழ்வு கொண்டார்கள் இப்றாஹீம் (அலை) அவர்கள். இறைவன் மீது அவரது பற்றுருதி மென்மேலும் பெருகியது.
இறைவன் இப்றாஹீம் நபி(அலை) அவர்களை ஒவ்வொரு முறை சோதித்தபோதும் இறை நிந்தனை செய்யாது எல்லா சோதனைகளிலும் வென்றார்கள். இறுதியாக மாபெரும் சோதனை நபி இப்றாஹீம் அவர்களுக்கு வந்தது.


ஓரிரவு இப்றாஹீம்(அலை) அவர்கள் ஒரு கனவுக் கண்டார்கள். ஆம் தன் மகனை தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போல இப்றாஹீம் (அலை) அவர்கள் கனவு கண்டார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் அர்ப்பணித்த இப்றாஹீம் நபி(அலை) அவர்கள் தாம் கண்ட கனவை செல்ல மகனிடம் அறிவித்தார்கள். இஸ்மாயில் அவர்களும் தம் தந்தையிடத்தில் இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி பணித்தார்.

தன்னைப் பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ எனக்கருதிய இஸ்மாயில் நபியவர்கள் தந்தையின் கண்களைக் கட்டினார். கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார். ஆனால் இறைவன் அந்த நரபலியைத் தடுத்து அவர்களின் தியாகத்தை மெச்சி, இதன் ஞாபகார்த்தமாக ஒரு ஆட்டை பலியிட்டு அவர்களையும் மற்றவர்களையும் புசிக்குமாறு கூறுகின்றான்.

பல பிள்ளைகளைப் பெற்றவனே தன் ஒரு பிள்ளையை இழக்க சஞ்சலப்படும்போது, ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்றாஹீம் அவர்களின் தியாகத்தை என்னவென்பது?

இப்புனிதப் பெருநாளில் நாமும் இப்றாஹீம் நபியவர்களின் தியாகத்தை மனதில் நிறுத்தி, புத்தாடை பூண்டு, அதில் நறுமணம் தடவி, பள்ளி சென்று இறைவனை இதயம் கனிந்து தொழுது உற்ற நண்பர்களுடன் உறவாடி உற்றார் உறவினர்களுடன் உளப்பூரிப்போடு நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் ஏழைகளைப் போற்றி இறைபணிந்து வாழ்வோம்.



ஹஜ் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

நன்றி வெப்துனியா.காம்


Tuesday, October 11, 2011

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:


* சொர்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் சுத்தம். - அஹ்மது
* நிச்சயமாக, செயல்கள் எல்லாம் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன - புகாரி, முஸ்லிம்
* நீ ஒரு பொருளை (அதிகம் ) நேசிப்பது,
( உன்னை) குருடனாகவும், செவிடனாகவும் ஆக்கிவிவிடும். - அபுதாவூது
* அண்டை வீட்டார் யாருடைய தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்,
சுவனம் நுழைய மாட்டான் - முஸ்லிம்



* வணக்கத்தின் மூளை பிராத்தனையே ஆகும் ..
பிராத்தனையே வணக்கம் தான் -திர்மதி
* புறம் பேசுதல், விபச்சாரத்தை விட மிகக் கொடியதாகும் - பைஹகீ
* சலங்கை ஓலியாகிறது, ஷைத்தானின் இசைக்கருவிகாளகும் - முஸ்லிம்
* பரிசுத்தம் என்பது ஈமானின் ஒரு பகுதியாகும் - முஸ்லிம்
* திருக்குர் ஆனைப் பற்றி வீண் தர்க்கம் செய்வது விசுவாசத்தை நிராகரிப்பதாகும் - அபூதாவூது.




* ஒரு சமூகத்தின் சங்கைக்குரியவர் உங்களிடம் வந்தால் அவருக்கு மரியாதை செய்யுங்கள் - முஸ்லிம்.
* யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ,
(அவன்) இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் - திர்மதி, அஹ்மது
* நம்மில் எவன் மோசடி செய்கிறானோ ( அவன் ) நம்மை சார்ந்தவன் அல்லன் - முஸ்லிம்
* தருமத்தில் சிறந்தது பசித்திருப்பவரின் வயிற்றை நிரப்புவதாகும் - பைஹதீ




* இஸ்லாத்திலே துறவறம் என்பது கிடையாது - அபூதாவூது
* நிச்சயமாக செயல்கள் எல்லாம் இறுதி முடிவுகளை கொண்டே இருக்கின்றன - புகாரி
* புறங் கூறுபவன் சொர்க்கப்பதி நுழைய மாட்டான் - புகாரி, முஸ்லீம்
* மார்க்கக் கல்வியை தேடுவது ஓவ்வொரு முஸ்லிம் ( ஆண் - பெண்) மீதும் கட்டாயக் கடமையாகும். - இப்னுமாஜா, பைஹகீ
* நிச்சயமாக அறியாமையின் மருந்து கேட்டுத் தெரிந்துக் கொள்வதே ஆகும் - அபூதாவூது


Saturday, July 23, 2011

Allah vai anji kollungal

Moosa Nabi Idam ALLAH Kaettan
Ummudaya Rooh Piriumboathu Nilamai Yeppadi Erunthathu..?
Moosa Nabi Said:
Uyirulla Aattin Thoalai Pirithu Urikkum poal Irunthathu..
ALLAH'vuku Migavum Piditha Moosa Nabikkae Intha Nilamai Yendraal Nammudaya Nilamai Yeppadi Irukum..
Namakum Oru Naal Maranam Undu..
Adhil Yendha Oru Santhaegamum Illa..
Andru Nammudaya Nilai Yeppadi Irukum Yenbathai Satru Sinthithu Paarungal..
Inum kabrin Thanimaiyoa Miga Bayangaramanadhu,
ALLAH'vai Anji Kollungal..
ALLAH Nam Yaavaraium Kaapaatru Vaanaaga.. Aameen!!....

posted from Bloggeroid




Friday, June 10, 2011

assalamu alaikum.Quran as cure. 3 imp n beneficial thngs:



1.Hazrat Muhammad s.a.w. Says tat if a person recites Ayatul qursi aftr evry Farz Namaz then there wil b nthng b/w hm n heavn xcpt death.

2."LA haula wala quuata illa billahil aliyul Azeem" is such a gr8 mdcine tat it cures evry disease and da mst minor disease it cures is Sorrow.

3."if a prsn recites Surah Ikhlaas(QUL HUWALla)10 times in a day thn Allah wil build a palace 4 hm in the heaven.

The last bt nt da least Allah says"Spread da knwldge watevr u have.its a duty of each n evry Muslim.
Jumma mubarak.plz include me in ur duas

posted from Bloggeroid




Thursday, June 2, 2011

நபி மொழி கேட்க வாருங்கள்:


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

*நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

*ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. 7:31

*தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

*நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

*செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்..!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ்
எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)

*மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்)
அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’
(திர்மிதீ)

*உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம்
சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)

*“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு
வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

*நாங்கள் சென்ற பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்திக் கூறினார்கள்" அறிவித்தவர் ..அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)


Wednesday, June 1, 2011

assalamu alaikum

NIGHT TIPS:
1. Go to sleep with Wudhu.
2. Sleep on your right shoulder.
3. Fall asleep with the intention to pray fajar.
4. Read the Kalima Tayyab.(La ilaha illallahu Muhammadur rasulullah)
5. Drift off reading the Ayat-ul-Kursi.
6. Read the Durud Sharif 10 times.("Allahumma Salli alaa" and ends "Innaka Hameedu m' majeed")
7. Read Surah Fatiha 4 times.
8. Read Surah Ikhlas 3 times.
9. Read the Kalima Tamjeed 4 times.(Subhanallah, wal hamdu lillah, wa la ilaha illallahu, wallahu akbaru wa la hawla wa la quwwata illa billahil 'aliyyil 'azim)
10. Do Astaghfar 10 times.
11. Forgive everyone before falling asleep.
12. Finally, "whoever says 'Bismillah' 21 times before falling asleep, Allah tells the angels to write down a good deed for every breath he takes."
Send this as Sadqa Jariya (everlasting charity).. If someone acts on any of this information, you will benefit too InshAllah..

posted from Bloggeroid




Monday, May 23, 2011

இறைவனிடம் கையேந்துங்கள்:



அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்..
(எடுத்தெரியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
(அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால் (துவங்குகிறேன்)
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)



இறைவனிடம் கையேந்துங்கள்:

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ர­லி)
நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்


இறைவனிடம் கையேந்தி கேட்க்கப்படும் எந்தப் ஒரு பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்பதினை இந்த நபிமொழி கூறுகிறது.



"தேவைகள்" என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கிய அம்சமாகும். தேவைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது

நமது தேவைகளை, இறைவனிடம் மட்டுமே தான் கூற முடியும். இறைவனிடம் அந்த ஹலாலான தேவைகளை சொல்லும் போது நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி கூட சில தேவைகள் நிறைவேறாவிட்டால் கூட இறைவனிடத்தில் தேவைகளை ஒப்படைத்து விட்டோம். அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது.



நாம் தினம் தினம் இறைவனை நினைத்து தொழுது இறைவனை வணங்கி அவனிடமே இருகரம் ஏந்தி பிராத்திக்க வேண்டும்..
சிலர் தினமும் 5 வேலை கடமைக்காக தொழுது... இறைவனிடம் தேவைகளை மட்டுமே குறி வைத்து கேட்டு தொழுதால் அந்த தேடல்கள் நிறைவேறுவது கஷ்டமே..

கஷ்டம் வரும் பொழுது மட்டுமே சிலர் இறைவனை நாடுகிறார்கள்.. அழுது தொழுது அந்த வேலையில் மட்டுமே இறை ஞானம் வரும் சிலரையும் பார்க்க முடிகிறது.. இது அவர்கள் அறியாமல் செய்யும் தவறு..(அல்லாஹ் காப்பாற்றுவானாக) அல்லாஹ் நன்கு அறிந்தவன்..

அப்படி எல்லாம் தேவைகளுக்கு மட்டுமே இறைவனை நாடாமல் இறை நேசத்துடனும் அவனுக்கு நன்றி செலுத்தியும் இறைவனிடம் மன்றாடி கேளுங்கள்... உங்களின் தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான்...

அவனிடம் மட்டுமே கோரிக்கை வையுங்கள்... மனதினை ஓர்நிலைப் படுத்தி இறையச்சத்துடன் பயபக்தியுடனும் தொழுது நமது தேவைகளை கேட்டால் நிச்சயம் அந்த தேவைகள் நிறைவேறும்.. (அல்லாஹ் துணையிருப்பான்)

எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாகவும் ஆமீன்..


இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் வேறு சில இறை செய்திகளுடன் சந்திக்கிறேன் வஸலாம்
..............................................................................
இந்த பக்கத்தினை நான் உருவாக்க காரணங்கள் உண்டு...
மார்க்க அறிவினை நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதர்க்கும்
எனது மகளுக்கு மார்க்க விஷயங்களை சொல்லி கொடுக்க இது ஒரு பாலமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையிலும், எனது நேரத்தினையும் படிக்கும் உங்களின் நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பம் செய்திருக்கேன்.. உங்களின் தூவாக்களுடன்...
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வாரம் ஓர் பதிவு போடலாம் என்று இருக்கேன் (இன்ஷா அல்லாஹ்)


Sunday, May 22, 2011

அர்ஷின் கீழ் நிழல் தரும் அந்த 7 கூட்டத்தினர்:

அல்லாஹ்வின் நிழலைத் தவர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் 7 கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் இடம் கொடுப்பான்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஹ்ஷர் வெளியின் அகோரம்:
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும், அங்கு சூரியன் மனிதர்களுக்கு ஒரு மைல் தூரத்தில் நெருங்கியிருக்கும்.
மனிதர்கள் அவரவர் செய்த பாவத்திற்கிணங்க வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.


அந்த இடத்தில் 4 கேள்விக்கு விடை சொல்லாதவரை ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. அந்த கேள்வி 1. உலகில் தன் வாழ்நாளை எப்படி கழித்தார்?
2.தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார்?
3.தன் பணத்தை எங்கிருந்து சம்பாதித்தார்? இன்னும் எப்படி செலவு செய்தார்?
4.தன் உடம்பில் எதனை அர்பணித்தார் என்று 4 கேள்விகள் கேட்க்கப்படும் வரை அடியானின் இரு பாதங்களும் அவர் இருக்கும் இடம் விட்டு நகராது என்று நபி(ஸ்ல) அவர்கள் கூரினார்கள்
இப்படி இக்கட்டான சூழ்நிலையில், ஓவ்வொருவரும் தன்னை பற்றியே சிந்திக்கும் அந் நாளில் தான் அல்லாஹ் தனது அர்ஷியின் நிழலில் 7 கூட்டத்தினரை அமரவைப்பான்.

அவர்கள்
1. நீதியான அரசன்.
2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் உருவான வாலிபன்.
3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்
4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
5. நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபசாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன் என்று கூறி ஓதுங்கிக் கொண்டவர்
6. வலது கரம் கொடுக்கும் தர்மம் இடது கரம் தெரியாமல் மறைமுகமாக தர்மம் செய்பவர்கள்
7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவர்.
அன்பு நண்பர்களே மேலே சொன்ன 7 கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று இந்த நோன்பு வேலையில் முடிவு எடுங்கள்.
அல்லாஹ் நிச்சயம் துணை இருப்பான் ஆமீன்


இஸ்லாமிய கேள்வி பதில்கள்: பகுதி 2


இன்றைய இஸ்லாமிய கேள்வி பதில்கள்:

1. முதலில் இறங்கிய சூரா எது?
சூரா இக்ரஃ

2.இறுதியாக இறங்கிய சூரா எது?
சூரா இதாஜாஅ

3.குரானில் மொத்தம் எத்தனை சூராக்கள் உள்ளன?
114 சூராக்கள்

4.குர் ஆனின் இதயம் எது?
யாசின் சூரா

5 மக்கி என்றால் என்ன?
மக்காவில் இறங்கிய சூராவிற்கு மக்கி என்று பெயர்.

6 மதனி என்றால் என்ன?
மதீனாவில் இறங்கிய சூராவிற்கு மதனி என்று பெயர்.

7. நாம் எத்தனை விஷ்யங்களைக் கொண்டு ஈமான் கொண்டுள்ளோம்? அவையாவை?
6 விஷ்யங்கள் கொண்டு ஈமான் கொண்டுள்ளோம்.
அவை
1. ஆமத்துபில்லாஹி
2. வமாலாயிக்கத்திஹி
3. வகுத்பிஹி
4 வரசூலிஹி
5. வல்யவ்மில் ஆஹிரி
6. வல்கத்ரி ஹைரிஹி வஷ்ர்ரிஹி மிளல்லாஹி த ஆலா
இதன் பொருள் "நான் அல்லாஹூ த ஆலாவைக் கொண்டும், அவனுடைய மலக்குகள் உண்டென்றும், அவனது வேதங்கள் உண்மை என்றும், அவனது ரஸூல்மார்கள் மெய்யானவர்கள் என்றும், இறுதி(கியாமத்து) நாள் உண்டு என்றும், விதியின் படி நன்மையும் தீமையும் அல்லாஹூ த ஆலாவினால் உண்டாகின்றன என்றும், மரணத்திற்குப் பின் உயிர்ப் பெற்று எழுப்புவது உண்டு என்றும் ஈமான் கொள்கிறேன்" என்பதாகும்

8. ஒருவரை ஒருவர் சந்தித்தால் என்ன சொல்ல வேண்டும்?
அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும்.

9.ரஃசுல் குரான் என்பதின் பொருள் என்ன?
இது எதை குறிக்கும்?
ரஃசுல் குரான் என்பது குரானின் தலையாகும் இது சூரா பாத்திஹாவை குறிக்கும்.

10 கியாமம்(இறுதி நாள்) முடியும் நாள் எது?
வெள்ளிக் கிழமை


இஸ்லாமிய கேள்வி பதில்கள்


1.நமது இறைவன் யார்?

நமது இறைவன் அல்லாஹ்

2.நமது நபி யார்?

முஹம்மது நபி ஸல்லலாஹீ அலைக்ஹி வஸ்ஸலாம் அவார்கள்

3.நமது நபி அவர்கள் எங்கு பிறந்தார்கள்?

மக்காவில்

4.நமது நபி அவர்கள் எங்கு வஃபாத்தானார்கள்?

மதினாவில்

5.நமது நபியின் தாய், தந்தை பெயர் என்ன?

ஆமீனா உம்மா, அப்துல்லாஹ்

6.நமது முதல் நபி யார்?

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

7.நமது வேதம் எது?

திருக்குரான்

8.நாம் எதை நோக்கி தொழுகின்றோம்?

கஃபாவை நோக்கி தொழுகிறோம்.

9.நீ யார்?

நான் ஒரு முஃமீன்

10.இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?

இஸ்லாத்தின் கடமைகள் 5 அவை 1.கலிமா2.தொழுகை3.ஜகாத்து,4.நோன்பு5.ஹஜ்

11.சுவர்கத்தின் திறவு கோல் எது?

தொழுகை

12.ஒரு நாளைக்கு எத்தனை வேளை தொழுகிறோம்?

5

13.நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?

சுவர்கம்

14.தீமை செய்தால் என்ன கிடைக்கும்?

நரகம்
15.நமது இறுதி நபி யார்?

முகம்மது நபி ஸல்ல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்


Saturday, May 21, 2011

தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்






அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

இந்த நன்நாள் பற்றி நண்பர்களின் வலைப்பூவில் பார்க்கவும்.. அஸ்மா, அந்நியன்
யாசர் அராபாத்
, காயலாங்கடை காதர்