Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, January 6, 2012

அண்டை வீட்டாரிடம் அன்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்னைக்கு நமது வலைப்பூவில் குழந்தைகளுக்கான மார்க்க கதை சொல்லபோறேன்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அப்துல்லாஹ் (ரலி) என்ற ஒரு ஸஹாபி இருந்தார். அவர் மிகவும் நல்லவராகவும், அல்லாஹ், ரஸூலின் கட்டளைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்.
அவருக்கு அண்டை வீட்டில் ஒரு யூதர் இருந்தார்.
ஒரு நாள் அப்துல்லாஹ் (ரலி) வெளியே போயிருந்தார். மாலையில் தான் வீட்டுக்குத் திரும்பினார். அவர் வீட்டில் உணவாக ஒரு கடா அறுக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து
"அண்டை வீட்டுக்காரருக்கு மாமிசம் கொடுத்தீர்களா?" எனக் கேட்டார்கள்.
"அவரோ யூதர், அவருக்கு ஏன் கொடுக்க வேண்டும்?"
என்று வீட்டார்கள் கேட்டார்கள்.
"யூதராக இருந்தால் என்ன? அவர் நமது அண்டை வீட்டார்தானே. என அப்துல்லாஹ் (ரலி) பதில் கூறினார்கள்.
"அண்டை வீட்டாருடன் அன்புடன் நடந்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் நம் இஸ்லாமியராக இருந்தாலும் சரி இஸ்லாமியர் அல்லாதவர்களாக இருந்தாலும் சரியே" என்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) வற்புறுத்திக் கூறியுள்ளதை அப்துல்லாக்(ரலி) தம் வீட்டாருக்கு எடுத்துணர்த்தினார்கள்..
அன்பு குழந்தைகளே.. இந்த கதையின் மூலம் உங்களுக்கு என்ன புரிந்தது..? நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் எந்தளவுக்கு அன்பாய் இருக்கிறோமோ இதனை போல் நாம் அண்டை வீட்டாரிடமும் அன்பாய்யிருக்க வேண்டும். குர்ஆனிலும் நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையிலும் அண்டை வீட்டாருடன் இனக்கமாக நடந்து கொள்வது வலியுறுத்தப்படுகிறது. அண்டைவீட்டாரிடம் அன்பாய் இருக்கனும் அவர்களுக்கு நம்மால் எந்த துன்பமும் கொடுக்ககூடாது..
நபி நாயகம் (ஸல்) "எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகின்றாரோ அவர் என்னை துன்புறுத்தியவராவார்.
அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன்."
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த மனிதரின் இடையூறுகளிலிருந்து, அவரது அடுத்த வீட்டுக்காரன் பயமற்று இருக்கவில்லையோ அந்த மனிதர் சுவனம் புகமாட்டார்” என
-அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம்)
அண்டை வீட்டாருக்கு நம்முடைய அன்பும், அரவணைப்பும், விருந்தும் இரு குடும்பத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
வஸலாம்


12 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான பதிவு. மிக அழகான presentation. ஜசாக்கல்லாஹ்.

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  2. வலைக்குமுஸ்ஸலாம்.. குழந்தைகளுக்கான பகிர்வாக இருந்தாலும் அனைவருக்கும் பயன்படும்.. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ஜசாக்கல்லாஹ்.

    ReplyDelete
  3. அண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறையை பதிவு அழகாக விளக்கியுள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஜமால் அண்ணன், சுவனப்பிரியன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. சிம்பிளா அழகா சொல்லி இருக்கீங்க ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)

    ReplyDelete
  6. அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சுருக்கமானதாக இருந்தாலும் மாஷா அல்லாஹ் தேவையான செய்திகள்!

    பகிந்தமைக்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  8. //ஜெய்லானி said...
    சிம்பிளா அழகா சொல்லி இருக்கீங்க ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)// குழந்தைகளுக்கு இப்படி சிம்பிளா சொன்னால் தான் மனசுல நிக்குனுது அண்ணன்..

    ReplyDelete
  9. //Kanchana Radhakrishnan said...
    அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.// உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. //G u l a m said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சுருக்கமானதாக இருந்தாலும் மாஷா அல்லாஹ் தேவையான செய்திகள்!

    பகிந்தமைக்கு நன்றி// வலைக்குமு ஸ்ஸலாம். சுருக்கமாக சொன்னால் தான் குழந்தைகள் விரும்பிப் படிக்குறாங்க.. அவங்க மனசிலும் இந்த விஷயம் புரிந்துவிடும்... வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாக்கல்லாஹ் க்கைர்

    ReplyDelete
  11. வணக்கம் நண்பரே உங்களது பதிவு ஒன்றை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம் நன்றி.நேரம் கிடைக்கும்போது பார்த்துச் செல்லவும்
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html

    ReplyDelete